
கோலாலம்பூர், மே. 16-
இம்மாதம் மே 2ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த கணவன் மனைவி திரு. துரைசிங்கம், திருமதி மேனகா தம்பதியர் குடும்பத்திற்கு அரசு சார்பற்ற இயக்கமான அன்பு இதயம் சிலாங்கூர் அமைப்பு 2,000 ரிங்கிட் வழங்கியது.
திடீரென்று நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் அந்த தம்பதியரின் குடும்பத்தினர், குறிப்பாக அவர்களின் பிள்ளைகள் நிலை கண்டு தமது என் ஜி ஓ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டியதாக அதன் தோற்றுனர் கணேசன் அரசப்பன் கூறினார்.
தாய் தந்தையரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.
பிள்ளைகளும், குடும்பத்தினரும் தைரியமாக இருக்க வேண்டும். அப்பா அம்மாவின் ஆசிகள் எப்போதும் இருக்கும் என்று திரு .கணேசன் கூறினார்.
இந்த மனிதாபிமான நிதி வழங்கும் நிகழ்ச்சியில் , அமைப்பின் உறுப்பினர்கள், மற்றும் செந்தூல் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

