

செந்தூல், மே 16-
பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் கடந்த வாரம் தனது தொகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கு நல்ல முறையில் தீர்வு கண்டார்.
செந்தூல் மார்க்கெட் வியாபாரிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
செந்தூல் பிபிஆர் வீடுகளில் குடியிருக்கும் மக்களையும் நேரில் சந்தித்தார்.
அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் மூலமாக தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.
பத்து தொகுதி மக்கள் எதாவது பிரச்சனைகள் என்றால் தமது மக்கள் சேவை மையம் அல்லது அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடலாம்.
அதன் மூலம் படிப்படியாக மக்கள் பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காண முடியும் என்று பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

