LIGA PENALTI Piala President PPP! வெற்றி பெறும் 10,000 வெள்ளி ரொக்கப் பரிசு

செமினி, மே 16-
உலுலங்காட் தொகுதி பிபிபி ஆதரவோடு ரிஞ்சிங் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப் மற்றும் காசே இக்லாஸ் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் LIGA PENALTI
Piala President PPP ! போட்டி நாளை 17-5-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு செமினி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

நாளை காலை எட்டு மணிக்கு உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சனி ஹம்சான் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

பின்னர் காலை 11.00 மணிக்கு டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் சிறப்பு வருகை புரிகிறார்.

மதியம் 2.30 மணிக்கு மேல் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா சிறப்பு வருகை தந்து வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பிக்கிறார்.

நாளை நடைபெறும் இந்த போட்டியில் 100 க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொள்கிறது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் குழுவுக்கு 5,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 2,000 வெள்ளி, 3 ஆவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 1,000 வெள்ளி மற்றும் 4 ஆவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 500 வெள்ளி வழங்கப்படும்.

ஐந்து முதல் எட்டு இடங்கள் பிடிக்கும் குழுக்களுக்கு தலா 100 வெள்ளி வழங்கப்படும்.

ஆக மொத்தம் வெற்றி பெறும் குழுக்களுக்கு 10,000 வெள்ளி ரொக்கப் பரிசு காத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles