மலாக்காவை பெனால்டி கோல்களில் வீழ்த்தி பரதன் கிண்ணத்தை சிலாங்கூர் வென்றது!

கோலாலம்பூர் மே 17-
செராஸ் கால்பந்து அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் சிலாங்கூர் குழு 4-3 என்ற பெனால்டி கோல்களில் மலாக்கா குழுவை வீழ்த்தி பரதன் கிண்ணத்தை வென்றது.

மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 90 நிமிடங்களில் இரு குழுக்களும் கோல்களை அடிக்கவில்லை.

கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு குழுக்களும் தலா ஒரு கோல்களை அடித்தது.

120 நிமிட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனை தொடர்ந்து பெனால்டி வழங்கப்பட்டது.

இறுதியில் சிலாங்கூர் குழு 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பரதன் கிண்ணத்தை வென்றது.

மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தலைமையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தை காண 5,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கை நோக்கி படை எடுத்தனர்.

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஹமிடின் உட்பட எம்.ஏ.எம். அதிகாரிகள் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles