


கோலாலம்பூர் மே 17-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நேற்று செராஸ் கால்பந்து அரங்கில் மிகப்பெரிய அளவில் பரதன் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிலாங்கூர் 4-3 என்ற பெனால்டி கோல்களில் மலாக்கா குழுவை வீழ்த்தி பரதன் கிண்ணத்தை வென்றது.
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் மொத்தம் பத்து குழுக்கள் பங்கேற்றது.
இதில் இறுதி ஆட்டத்திற்கு சிலாங்கூர் – மலாக்கா குழுக்கள் தேர்வு பெற்றது.
இம்முறை சிலாங்கூர் குழு சாம்பியன் பட்டத்தையும் 20,000 வெள்ளி ரொக்கப் தை தட்டி சென்றது.
மலாக்கா குழுவுக்கு 10,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
போலீஸ் படை 3 ஆவது இடத்தையும் பெர்லிஸ் 4 ஆவது இடத்தையும் பிடித்தது.
பரதன் கிண்ண கால்பந்து போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ பதி இம்முறையும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு, துணை தலைவர் டத்தோ சிவசுந்தரம், உதவி தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஹமிடின் பரதன் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தை கண்டு களித்தனர்.

