


கோலாலம்பூர் மே 17-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் நேற்று செராஸ் அரங்கில் பரதன் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது.
சிலாங்கூர் குழு 4-3 என்ற பெனால்டி கோல்களில் மலாக்கா குழுவை வீழ்த்தி பரதன் கிண்ணத்தை வென்றது.
இருப்பினும் இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை மலாக்கா குழு வெளிப்படுத்திய ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பலம் வாய்ந்த சிலாங்கூர் குழுவுக்கு ஒவ்வொரு நிமிடமும் மலாக்கா குழு அதிர்ச்சியை கொடுத்தது.
அதிர்ஷ்டம் இல்லாததால் மலாக்கா குழு பெனால்டி கோல்களில் தோல்வி கண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

