
ஈப்போ, ஜுன்.13:இங்குள்ள சிமி ரூட் 11, கம்போங் சிமியில் நடந்த சம்பவத்தில், தனது குழந்தை முன்னிலையில் தனது மனைவியை அடித்தும், குத்தியும் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று முதல் ஜூன் 19 வரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
சந்தேகநபர் நேற்று ஈப்போ நீதிமன்றத்தில் நீதிபதியுடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, 56 வயதான சந்தேகநபருக்கு எதிரான விசாரணை வைக்குமாறு மஜிஸ்திரேட் பரா நபிஹா முஹமட் உத்தரவிட்டுள்ளார்.
கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின்படி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிப்பதற்காகவே இந்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் நேற்று காலை 11.10 மணியளவில் வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் சாம்பல் நிற ட்ராக் பேண்ட் அணிந்து அமைதியாக காட்சியளித்தார்.
48 வயதுடைய பெண் ஒருவர் சுயநினைவின்றி இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலிசாருக்கு காலை 9.26 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்து.பின்பு ஒரு மணி நேரத்திற்குள் சம்பவம் நடந்த இடத்தில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் பல தடவைகள் கத்தியால் குத்துவதற்கு முன்னர், அவரது மனைவியின் தலை உட்பட பல இடங்களில் தாக்கியதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் தனது வீட்டின் கேரேஜ் பகுதியில் மார்பில் மூன்று கத்திக் காயங்களுடன் மற்றும் தலையில் காயத்துடன் கிடந்தார், இந்த சம்பவத்தை தம்பதியரின் 12 வயது மகளும் நேரில் பார்த்துள்ளனர்.

