எம்.பி.நாவாஸ் கனி அறிவிப்பு
பிறை, ஜூன் 14-
இந்தியா மற்றும் மலேசியாவிற்கான நல்லுறவுகளின் வழி பல வர்த்தகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதனை மேலும். வலுப்படுத்த குறிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் பயணிகளுக்கு விசா தளர்வை மலேசிய அரசு ஏற்படுத்தியதுபோல இந்தியாவும் அத்தகைய நடவடிக்கையை அமல் படுத்தவேண்டும் என்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி கூறினார்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் ராமநாதபுர தொகுதில் இரண்டாவது முறை போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற அவர் இதனை தெரிவித்தார்
.
பினாங்கில. நிகழவிருக்கும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்ள வருகை அளித்த அவருக்கு பெலித்தா நிறுவனம் நேற்று இரவு பினாங்குஙலைட் ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர்
தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியா அரசு இந்திய பயணிகள் மலேசியாவிற்கு நுழைய விசா தளர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை இந்தியா நடைமுறைப்படுத்தவில்லை்
இந்திய அரசும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதின் வழி இரு தரப்பு வர்த்தக உறவுகள் மேலும் வலுபெற வாய்ப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரதமை நாடாளுமன்றதில் இந்திய அரசாங்க கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளேன், இதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் மீண்டும் பேசுவேன் என்றார்.
முன்பு தமிழகத்திற்கு பினாங்கில் இருந்து விமானச் சேவை இருந்து வந்துள்ளது. அது மீண்டும் தொடரவும் உரிய நடவடிக்கையை மேற்கொளவேன் ,
இந்த விவகாரத்தை தமிழ் நாடு முதல்வர் மு. க. ஸ்டாலிடனும் கலந்து பேசுவேன் என்றார்.இங்கு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பல சமுக அமைப்புகள் கே. நாவாஸ் கனிக்கு மாலை , பொன்னாடை அணிவித்து கௌரவரப்படுத்தியது.
பெலித்தா சமுக நல அமைப்பு அவருக்கு
லட்சிய வேந்தர் எனும் விருதை வழங்கி கௌரவித்தது.
இந்த நிகழ்வில. பினாங்கு லைட் ஹோட்டலின் . நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரமேஸ் , தமிழக தொழில் அதிபர் டாக்டர் கே. சிராஜூடின் , தொழில் அதிபர் டத்தோ ஜவ்வர் அலி, பெலித்தா நிறுவன இயக்குனர் டத்தோ உஸ்வத், பேரா மாநில நகைக் கடைகளின் சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில். உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.