
செ.வே. முத்தமிழ் மன்னன்
பிறை, ஜூன் 16-
நாட்டில் தலைசிறந்த இந்திய பெண்கள் கால்பந்து குழுவாக பினாங்கு இந்திய பெண்கள் குழு வலம் வருகிறது.
பல தேசியப் போட்டிகளில் பங்கேற்று அதிரடி படித்துக் கொண்டிருக்கும் பினாங்கு இந்திய பெண்கள் கால்பந்து குழு தற்போது மூன்று முக்கிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறது.
இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் 12 வயதுக்கு உட்பட்ட பினாங்கு மாநில தேசிய கால்பந்து போட்டியில் பினாங்கு இந்திய பெண்கள் குழு பங்கேற்கிறது.

பின்னர் பினாங்கு மாநில லீகா அகாடமி கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டி ஜூன் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
பின்னர் ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெறும் வீரா மூடா அகாடமி கால்பந்து போட்டியில் பங்கேற்கிறது என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவருமான ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பயிற்றுநர்கள் Kumar,
Mallika , Kartigah, Dinesh
Priya, Michelle , Ragani
Suguna, Azrin ஆகியோர் இப்போது பினாங்கு மாநில இந்திய பெண்கள் கால்பந்து குழுவுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள் என்று அவர் சொன்னார்.

