
கோம்பாக் தொகுதியில் வெற்றி பாதையை நோக்கி பக்காத்தான் ஹராப்பான், கோம்பாக் தொகுதி வேட்பாளரான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் எங்களை முழுமையாக நம்புகிறார்கள்.
அதற்காக நன்றி தெரிவிக்கும் வண்ணம், தான் மக்களுக்காக இன்னும் கடுமையாக உழைக்க சித்தம் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
22 மாதம் நாங்கள் என்ன செய்தோம் என்பதை விட இத்தனை ஆண்டு நீங்கள் என்ன செய்தீர்கள்?
போதும் மக்கள் ஏமாந்தது என்று அவர் கூறினார்.
மேலும் இத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன்.
அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால் பக்கத்தானுக்கு சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார் அவர்

