சுங்கை பூலோ தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் டத்தோ ரமணன்

ஏழு முனை போட்டியை எதிர் நோக்கினாலும் சுங்கை பூலோ தொகுதியில் வெற்றியை நோக்கி டத்தோ ரமணன் தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளார்.

வெற்றியை உறுதி செய்ய 2 சட்ட மன்ற உறுப்பினர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். வேட்பு மனு தாக்கல் முன் தினம் பக்காத்தன் வெற்றியை உறுதி செய்ய டத்தோ ரமணன் தலைமையில் முக்கிய சந்திப்பு கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் டத்தோ ரமணன், சுங்கை பூலோ பி.கே ஆர் நடப்பு தொகுதித் தலைவர் சிவராசா, கோத்தா டமன்சாரா சட்ட மன்ற உறுப்பினர் சத்ரி, பயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் முகமது கையிருடின் ஆகியோர் சந்தித்து பேசி வெற்றியை நோக்கி கடுமையாக உழைக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

சுங்கை பூலோவில் 7 முனை போட்டி ஏற்பட்டிருந்தாலும் வெற்றி நமதே என்று சூளுரைத்து களத்தில் இறங்கியுள்ளார் டத்தோ ரமணன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles