
பினாங்கு, ஜூன் 20-
சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Joohari Ariffin வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இன்று தெரிவித்தார்.
அப்பகுதியிலுள்ள மக்கள் அங்கு மாற்றத்தை விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான ஃபட்லினா, சுங்கை பாக்காப் தொகுதியை உள்கட்டமைப்பு, பொருளாதாரம், சமூக விஷயங்கள், மதம், ஒற்றுமை மற்றும் கல்வி ஆகியவற்றில் சிறந்த வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் தரமான தலைவர் சமூகத்திற்குத் தேவை என்றார்.
மாற்றத்தை விரும்பும் சமூகத்தினரிடையே ஒரு நல்ல மனநிலையைத் தாம் கண்டதாகவும் இம்முறை சுங்கை பாக்காப் மாநில இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

