
கோலாலம்பூர், ஜூன் 21- “ஓப்ஸ் மெகா பிந்தாஸ்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட 33 சோதனைகளில் மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 113 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 25 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 22 சிறார்கள் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (உளவுத்துறை/நடவடிக்கை) துணை இயக்குநர் டிசிபி ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, வங்காளதேசம், கம்போடியா, மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
மனித கடத்தல் நடவடிக்கைகளை போலீசார் கடுமையாகக் கருதுவதாகவும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் அல்லது குற்றக் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பை காவல்துறை பெரிதும் வரவேற்கிறது. மனித கடத்தல் நடவடிக்கைகள் பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
Bernama

