
பாசிர் மாஸ், ஜூன் 21 – இம்மாதம் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட டீசல் மானிய மறுசீரமைப்பு காரணமாக மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கும் ரந்தாவ் பாஞ்சாங் நகரிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த எல்லை நகரத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எதுவும் காணப்படவில்லை என்பது பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
எரி பொருளுக்காக தாய்லாந்து வாகனங்களுடன் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாதது உள்ளூர் மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
Bernama

