27 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்

கள்ளக்குறிச்சி விஷசாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து விஷசாராயம் குடித்து தம்பதி, உறவினர் என ஒரே பகுதியில் 25 பேருக்கு மேல் இறந்த கள்ளக்குறிச்சி, கருணாபுரத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்

. பின்னர் அப்பகுதியில் உள்ள இறந்தவர்களின் 27 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles