
பத்துகாஜா, ஜுன். 21: இங்குள்ள பூசிங்கில் தாம் சென் கோயில் நிர்வாகத்துடன் சேர்ந்து, பூசிங். கோவிலின் பிரதான மண்டபத்திற்கு வெளியே ஒரு மூடப்பட்ட சமையல் பகுதியைக் கட்ட தாம் சென் நிர்வாகத்திற்கு 10,000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கியதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
தற்போதுள்ள சமையல் இடம் பொருத்தமானதாக இல்லாததால், ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும் போது, பல சிரமங்களை ஏற்படுகிறது. இந்த நன்கொடை வாயிலாக சமையலறை சீரமைக்படும். இதன்வழி கோவில் நிர்வாகம் நிகழ்ச்சிகளை மிகவும் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடு செய்ய உதவும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் ஊ கா லுயோங் மற்றும் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தியுவ் ஆகியோரின் நிதி நன்கொடையும் துணைபுரியும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த திட்டம் வாயிலாக கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் சமூகம் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களை மிகவும் வசதியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்ய உதவும் என்று அவர் நம்பிக்ககையுடன் கூறினார்.
ஒருவர் நோயால் அவதிப்படும் போதோ அல்லது நீண்டகால உடல்நலப் பிரச்சனையை எதிர்கொள்ளும் போதோ, இது அவர்களின் வாழ்க்கையை முன்பு போல் சீர்குலைக்கும் என்பது உறுதி. அதுமட்டுமின்றி அவரது வருமானமும் குறையும். நிச்சயமாக, செலவுகள் குறிப்பாக மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியும் என்றாலும், வேறு பல செலவுகளை அவர்களே ஏற்க வேண்டியுள்ளது. இதனால் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவதில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

கவனமாக பரிசீலித்த பிறகு, உண்மையில் உதவி தேவைப்படும் 2 நோயாளிகளுக்கு அவர்களின் சுமையைக் குறைக்க சில நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நன்கொடை தாம் சென் பூசிங் கோயிலில் வழங்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பேராக் மலையாளி சங்கத்துடன் நல்லுறவு இருந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில், பத்து காஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் பேராக் மலையாளி சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு, பினாங்கில் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து மலேசிய மலையாளி சங்கம் (அம்மா) விளையாட்டு 2024 நிகழ்ச்சிக்காக 8000 ரிங்கிட் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. 21 கிளைகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த ஓய்வு நேர நடவடிக்கையில் பங்கேற்பார்கள். அவர்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கம். இது போன்ற தொடர்பு வாய்ப்புகள் அவர்கள் அறிவைப் பெறவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவும் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்தச் செயல்பாடு இளைஞர்கள் நல்ல நட்பைத் தேர்ந்தெடுக்கவும், தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருக்கவும் உதவும். ” அம்மா”கேம்ஸ் 2024 ஏற்பாட்டுக் குழுவிற்கு நல்வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.

