

மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஜூன் 22-
ம இகா உயர் மட்ட பதவிகளுக்கு இன்று பரபரப்பான சூழ்நிலையில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற வேளையில்துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ சரவணன் மீண்டும் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
கடந்த மாதம் ம இகா தேசிய தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இன்று துணை தலைவர், 3 உதவித் தலைவர், 23 மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.
இதில் மீண்டும் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ சரவணன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இறுதியில் மீண்டும் போட்டியின்றி டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

