அபாயகர ஆயுதங்கள், போலீஸ் உபகரணங்களை வைத்திருந்த மூவர் கைது

ஈப்போ, ஜூன் 22- கொள்ளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அபாயகர ஆயுதங்கள் மற்றும் போலீஸ் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததற்காக மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை 6.10 மணியளவில் சுங்கை செனாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பெரேடுவா அல்ஸா ரகக் கார் ஒன்றை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனால் அபிடின் அபாங் அகமது கூறினார்.

அக்காரிலிருந்து மூவர் மீதும் அந்த வாகனம் மீது நடத்தப்பட்ட சோதனையில் அபாயகர ஆயுதங்களும் போலீசார் பயன்படுத்தும் உபகரணங்களும் சட்டத்திற்கு புறம்பான முறையில் இருப்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles