
புத்ரா ஜெயா, ஜூன் 22-
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதி வழங்கினார்.
ஆனால் இதற்கான விதிமுறைகள் சற்று கடுமையாக இருந்தன.
இந்நிலையில் இந்த விதிமுறைகளை தளர்த்த முன்வந்த மனிதவள அமைச்சுக்கு
மைக்கியின் தலைவர் டத்தோஶ்ரீ என். கோபாலகிருஷ்ணன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மனிதவள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ கைரூல் டிசாமி தாவுத்துடனான நேற்று சிறப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
மைக்கியின் தலைவர் என்ற முறையில் நான் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டேன்.
மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் மற்றும் மலேசிய இந்திய டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும்
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையில் தலைவர் நிவாஸ் ராகவன், துணைத் தலைவர் பிரபாகரன், செயலாளர் மோகனா,சைக்கிளின் துணை செயலாளர் ஞானசம்பந்தன் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 3 தொழில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட 7,500 அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இத்தொழிலாளர்களை பெறுவதில் உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் என்று டத்தோஶ்ரீ கைரூல் உறுதியளித்தார்.
குறிப்பாக ஜவுளித் துறைக்கு 5 தொழிலாளர்கள், நகைக்கடை, முடித்திருத்தும் தொழில் துறைகளுக்கு தலா 2 தொழிலாளர்கள் எந்தவொரு நிபந்தனையும் இன்றி வழங்கப்படும் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

