கள்ளச்சாராய உயிரிழப்பு- 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான விவகாரம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சாராயத்தில் மெத்தனால் கலந்தவர்கள் என்ற அடிப்படையில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles