
பேரன்பிற்கும் பெறுமதிற்பிற்கும் உரிய ம.இ.கா தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம்.
நான் ஆண்ட்ரு டேவிட், வேட்பாளர் எண் (4) எதிர்வரும் 2024/2027 தவணைக்கான ம.இ.கா கட்சி தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றேன்.
சேவையையே குறிக்கோளாக இதுவரை கட்சியில் செயலாற்றிய நான், இந்தத் தவணை வரை தேசிய இளைஞர் பகுதியின் துணை தலைவராக (2021/2024) கட்சி சேவையாற்றியுள்ளேன்.
மேலும், இதுவரை இளைஞர்களை தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும், கிளையளவிலும் ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவைக் கட்சிக்கு வழங்கும் நடவடிக்கையில் இளைஞர் பகுதியோடு இணந்து செயல்பட்டுள்ளேன்.
மேலும், தேசிய இளைஞர் பகுதியின் துணைதலைவர் பதவியைத் தவிர, தேசிய இளைஞர் பகுதி செயலாளர் (2020/2021), மற்றும் கூட்டரசு பிரதேச இளைஞர் பகுதி துணை தலைவர் (2018/2021) ஆகிய பதவிகளிலும் இதுவரை செயலாற்றியுள்ளேன்.
தற்போது, ம.இ.கா தேசிய பணிப்படை தலைவராகவும், ம.இ.கா தேசிய விளையாட்டு குழு தலைவராகவும் மற்றும் பண்டார் துன் ரசாக் தொகுதியின் துணை தலைவராகவும் செயலாற்றி கொண்டிருக்கிறேன்
உங்கள் அணைவரின் வாக்குகளும் கட்சியில் இளைய தலைமுறையின் எழுச்சிக்கு வித்திட்டு, கட்சிக்குப் புதிய ஒரு உத்வேகத்தையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
ANDREW DAVID BRIGED MIC வேட்பாளர் எண் (4) மத்திய செயலவை உறுப்பினராக எனக்கு வாக்களித்து உங்களின் பேராதரவை எனக்கு வழங்குவீராக.
நன்றி வணக்கம்.
அன்புடன்,
ஆண்ட்ரு டேவிட்
ANDREW DAVID BRIGED MIC
வேட்பாளர் எண் (4)

