கெசெட் செய்யப்பட்ட ஆறு ஏக்கர் நிலப்பரப்பில்சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப் பள்ளி கட்டப்படும்! பாப்பா ராயுடு திட்டவட்ட அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பூலோ, ஜூன் 25-
அதிகாரப்பூர்வமாக கெசெட் செய்யப்பட்ட ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப் பள்ளி கண்டிப்பாக கட்டப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு இன்று தெரிவித்தார்.

சுங்கைபூலோ
ஆர்ஆர்ஐ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக 6 ஏக்கர்
மாற்று நிலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

பள்ளிக்கு நிலம் கிடைத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் தொடர்ந்து பல இப்பிரச்சினைகள் ஏற்ப்பட்டு பள்ளி நிலப்பிரசானை
இழுப்பறியாக இருந்தது.

அச்சமயம் பள்ளி கட்டுவதற்காக வேறொரு நிலமும் அடையாளம் காணப்பட்டு பலப் பிரச்சினைகள் ஏற்ப்பட்டது.

தற்பொழுது இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு முறையாக கெசட் செய்யப்பட்ட
அந்த 6 ஏக்கர் நிலம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.

இனியும் இதை யாரும் குழப்பி குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளியை எவ்வாறு சிறப்பாக கட்டுவது என்பது குறித்து திட்டமிடவேண்டும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு
உறுப்பினர் என்ற முறையில் இந்தியர்களின் பிரச்சினைக்கு நான் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன்.

அவ்வகையில் இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தர கல்வி அமைச்சுவிடம் பரிந்துரை செய்வேன் என பாப்பாராயுடு தெரிவித்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி நிர்வாகமும் பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இப்பணிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால் இத்தமிழ்ப்பள்ளி விரைவில் கட்டப்படும் என்று பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

ஆர்ஆர்ஐ
தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுவில் ஒரு சில பிரச்சினைகள் உள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles