போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

பட்டர்வொர்த்: ஜூன் 26- இன்று அதிகாலை 2 மணியளவில் பினாங்கு இங்குள்ள சுங்கை லோகனில் உள்ள ஜாலான் பெர்மாடாங் பாருவில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.

பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமது இந்தச் சம்பவத்தை உறுதி செய்தார் .

முன்னதாக, ஜாலான் போகோக் சேனா சந்திப்பில் ஜாலான் பெர்மாடாங் பாருவை நோக்கி ஒரு கார் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்வதை மாநிலக் காவல் தலைமையகம் மற்றும் செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) குழு கண்டறிந்தது.

அதன்பின் அவர்கள் ஒட்டி சென்ற வாகனத்தை நிறுத்துமாறு பொலிசார் உத்தரவிட்டனர்,

ஆனால் சந்தேக நபர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, போலிஸாரை நோக்கி பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் வேகமாகச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது.

இரண்டு உள்ளூர் சந்தேக நபர்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை அவர் உறுதிப்படுத்தினர்.

பெர்னாமா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles