கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலய கார்கள் நிறுத்தும் இட பிரச்சனைக்கு தீர்வு காணும்படி சுகாதார அமைச்சரிடம் டத்தோஸ்ரீ சரவணன் கோரிக்கை!

கோலாலம்பூர் ஜூன் 26-
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வளாகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டிருக்கும் திருமுருகன் ஆலயத்தின் கார்கள் நிறுத்துமிட பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்..

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வளாகத்தில் தேசிய தடயவியல் மருத்துவ மருத்துவ ஆய்வு கூடம் அமைக்கும் தளத்தை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி இன்று காலையில் நேரில் பார்வையிட்டார்.

அப்போது
சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளியிடம் ஆலய அறங்காவலர் டத்தோஶ்ரீ எம். சரவணன் இக்கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் ஆலய நிர்வாகத்துடன் அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்லி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

தலைநகரில் மிகவும் பழமை, புகழ் வாய்ந்த ஆலயமாகத் திருமுருகன் ஆலயம் விளங்கி வருகிறது.

இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கார்களை நிறுத்துவதற்கு பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

ஆகையால் ஆலயத்தின் கார் நிறுத்துமிடம் அமைப்பதற்கு சுகாதார அமைச்சு நிலம் ஒதுக்க வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இக்கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பில் ஆலயத் தலைவர் டத்தோ சுரேஸ் உட்பட ஆலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles