பெட்டாலிங் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்ல 72 தமிழ்ப்பள்ளிகள் இடையே பலப்பரீட்சை! பெண்கள் பிரிவில் 24 பள்ளிகள் பங்கேற்பு

செ.வே.முத்தமிழ்மன்னன்

ஷா ஆலம், ஜூன் 26-
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் 20 ஆம் ஆண்டு சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் மாணவர்கள் பிரிவில் 72 பள்ளிகள் பங்கேற்கிறது.

அதேசமயம் பெண்கள் பிரிவில் 24 தமிழ்ப் பள்ளி மாணவி குழுக்கள் கலந்து கொள்வதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை தெரிவித்தார்.

இன்று ஷா ஆலம் சுங்கை பெக்காம் தமிழ்ப்பள்ளி கொன்வெஷன் மண்டபத்தில் இந்த போட்டிக்கான குலுக்கல் விமரிசையாக நடைபெற்றது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 20ஆம் ஆண்டு சிலாங்கூர் – விலாயா மாநில தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.

இம்முறை ஆண்கள் பிரிவில் 72 குழுக்களும் பெண்கள் பிரிவில் 24 குழுக்களும் இப் போட்டியில் பங்கேற்கவுள்ளன என்று அவர் சொன்னார்..

இந்த கால்பந்துப் போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 6
3,000 ரிங்கிட்டும் ரொக்கமும் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 3, 000 ரிங்கிட் ரொக்கமும் காத்துக் கொண்டிருக்கிறது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணம் என்ற பெயரில் இப்
போட்டி நடத்தப்படுகிறது என்றும் பத்துமலை தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற குலுக்கல் நிகழ்வில் துணை தலைவர் குணசேகரன், கென்னத் கண்ணா, செயலாளர் குணசேகரன், பொருளாளர் இராமச்சந்திரன் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles