உலுசிலாங்கூர் மாவட்ட மலாய் மொழி பேச்சுப் போட்டி & கதை சொல்லும் போட்டியில் கோலகுபு பாரு தமிழ் பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்!

காளிதாஸ் சுப்ரமணியம்

உலுசிலாங்கூர், ஜூன் 26

உலுசிலாங்கூர் மாவட்ட தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் மலாய் மொழி பேச்சுப் போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டி இன்று கெர்லிங் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

உலுசிலாங்கூரில் உள்ள 9 தமிழ்ப் பள்ளிகளிருந்து 27 மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

மடானி தலைமுறையினரின் விருப்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் 13 மாணவர்களும் கதை செல்லும் போட்டிகில் 14 மாணவர்களும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தி அசத்தினர்.

நடைபெற்ற இப்போட்டியின் முழு செலவுகளையும் உலுசிலாங்கூர் நாடளுமன்ற ஒருங்கிணைபாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்களுக்கு சான்ரிதழ்களும் பரிசுக் கோப்பைகளும் எடுத்து வழங்கினார்.

மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அன்பளிப்புகளும் டாக்டர் சத்திய பிரகாஷ் வழங்கினார்.

மாணவர்களின் முதன்மை கடமை நல்ல கல்வி கற்பதே ஆகும். மாணவப் பருவத்தில் மாணவர்கள் அனைவரும் கல்வி கற்கும் கடமையை சரிவர செய்து முடிக்க வேண்டும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் தமதுரையில் பேசினார்.

நடைபெற்ற கதை சொல்லும் போட்டியில் நித்திஷ் மேல் த/பெ விமல் என்ற மாணவனும் பேச்சு போட்டியில் காந்தரூபிணி த/பெ கொங்டில் சாமி என்ற மாணவியும் வெற்றி வாகை சூடினர்.

இந்த இரு போட்டிகளிலும் முதல் நிலை வெற்றி பெற்ற மாணவர்கள் கோலகுபு பாரு தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியை சிறப்புடன் நடைபெறுவதற்கு பக்கபலமாக இருந்த டாக்டர் சத்திய பிரகாஷ் அவருக்கு உலுசிலாங்கூர் தலைமையாசிரியர் மன்றம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது.

போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் உலுசிலாங்கூர் மாவட்டத்தின் 9 தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர்கள், உலுசிலாங்கூர் கவுன்சிலர் ஶ்ரீகாந்த், கெர்லிங் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜமாலுடின் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles