தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வு பெறுகிறார் அண்ணாமலை?

சென்னை: தீவிர அரசியலில் இருந்து 6 மாதங்கள் ஓய்வெடுக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். 6மாத ஓய்வில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டில் 6 மாத கால படிப்பை நிறைவு செய்த பிறகு தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.

மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக மேலிடம் தற்போது வரை அண்ணாமலை கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. பாஜக மேலிடம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அண்ணாமலையின் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles