அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் தேர்தலில் சத்தியா சுதாகரன் வெற்றி

காளிதாஸ் சுப்ரமணியம்

ரவாங், ஜூலை 1-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் 45 ஆண்டு பேரவையும் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் தேர்வும் நேற்று ரவாங் செராண்டாவில் உள்ள மலேசிய தெலுங்கு சங்க அகாடமி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் நடப்பு தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

துணை தலைவர் பதவிக்கு நேரடி போட்டி நிலவியது.
இதில் நடப்பு துணை தலைவர் சத்தியா சுதாகரனை எதிர்த்து லெட்சுமணன் போட்டியிட்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் சிறந்த சமூக சேவையாளரான சத்தியா சுதாகரனுக்கு 395 வாக்குகள் கிடைத்தன.

எதிர்த்துப் போட்டியிட்ட லட்சுமணனுக்கு வெறும் 47 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இறுதியில் 352 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யா சுதாகரன் அமோக வெற்றி பெற்றார்.

மூன்று உதவித் தலைவர் தேர்தலில் பெண்டிகோட் சீதா ராவ், சுரேஸ் நாயுடு மற்றும் திருமதி வீரலட்சுமி சனி பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் கௌரவ செயலாளராக ஸ்ரீ சிவ சூரியநாராயணன் வெற்றி போட்டியின்றி தேர்வு பெற்றார்.

இரண்டு துணை செயலாளர் பதவிக்கு மூவர் போட்டியிட்டனர்.
இதில் கோபி நாயுடு அப்பமன் மற்றும் அப்பராவ் வெற்றி பெற்றனர்.

பொருளாளராக திருமதி சசிகலா ராமுலு, இளைஞர் பகுதி தலைவராக ஸ்ரீனிவாசராவ் மற்றும் மகளிர் அணி தலைவியாக Ehlaximee Devi ramadas போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இரண்டு ஆட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீ ஆனந்தராவ், ஸ்ரீ சூரிய நாராயணன் காவராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் ஆலோசகர் டத்தோ டாக்டர் அட்சயக்குமார் இந்த பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles