
லண்டன் : ஜூலை 6-
பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது.
தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்பிரிட்டனின் புதிய பிரதமராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ம் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிட்டனில் நடந்த தேர்தலில் 411 இடங்களுக்கு மேல் பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
சரியாக 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் ஆட்சியை தொழிலாளர் கட்சி பிடித்துள்ளது

