
கோலாலம்பூர்: ஜூலை 6-
பிரிட்டன் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய மூலோபாய உறவை வளர்ப்பதில் ஸ்டார்மரின் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆவலுடன் இருப்பதாகவும் அன்வார் தனது முகநூல் பதிவில் கூறினார்.
மலேசியா பிரிட்டன் இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என்ற தமது எதிர்ப்பார்ப்பையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.

