அரட்டைகளுக்கு செவி சாய்க்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஷா ஆலம் ஜூலை 6 , இந்தியர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்று கெஅடிலான் மகளிர் அணி உதவி தலைவர் சங்கீத ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

சில அரசியல்வாதிகளின் அரட்டைகளிலும் மாயா ஜாலங்களில் மயங்கிடக்கூடாது. சமீப காலமாக ஒரு சிலரின் அரசியல் சித்து விளையாட்டுகள் சமுதாயத்திற்கு தீமையாக முடிவதை காணமுடிகிறது.

அண்மையில்
ஒரு நபர் வெளியிட்ட காணொளியில் , பேங் ராயாட் அறிவித்த 50 மில்லியன் கடன் உதவித் திட்டத்தில் ஒரு இந்திய உணவகம் கடன் பெற தகுதி பெறவில்லை என்பதற்காக, அந்த வங்கி, அரசாங்கம், ஏற்பாடு செய்த துணை அமைச்சர் என அனைவரையும் சாடியிருந்தார்,

அந்த காணொளியை கண்டவர்களுக்கு அந்த திட்டம் குறித்து அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக அது அமைந்திருந்தது.

ஆனால், அந்த வங்கியின் பிரிஃப்-ஐ கடன் உதவித் திட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இதுவரை 140 இந்திய தொழில் முனைவோர்கள் கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் .பேங்க் ராக்யாட் பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 43 பேருக்கு 3.8 மில்லியன் கடன் உதவி அங்கீகரிக்க பட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது எதை காட்டுகிறது ? சமுதாயத்திற்கு கீழறுப்பு செய்வது யார் ? கடனுக்கு வழி ஏற்படுத்தியவரா? மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துபவரா ? இவர்களை நம்பியா நம் எதிர்காலத்தை தொலைக்கப் போகிறோம் என்று கெஅடிலான் மகளீர் தேசிய உதவித் தலைவருமான சங்கீதா ஜெயக்குமார் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles