
தவாவ், ஜூலை 8: நாட்டில் மொத்தம் 11,783 உணவு விற்பனை நிலையங்கள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான வளாகம் (BeSS) அங்கீகாரத்தைப் பெற்றன.
மேலும், குபோதா பகுதியில் உள்ள மூன்று வளாகங்களுக்குச் சுத்தமான, புகை இல்லாத வளாக (BeBAs) என்ற அங்கீகாரம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மட்டால் வழங்கப்பட்டது.
BeSS என்பது மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) தூய்மையான மற்றும் பல முக்கிய கூறுகளை கொண்டுள்ள வளாங்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும்
BeBAs திட்டமானது பல்வேறு அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ பங்காளிகள், தொழில்முறை அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) ஆகியவற்றுடன் உணவு வளாக ஆப்ரேட்டர்களின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது என முகநூலில் பதிவு மூலம் சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டது.

