
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 7-
நாட்டில் புகழ்பெற்ற மை எஃப்.சி. யாங் ஸ்டார் கால்பந்து கிளப் ஏற்பாட்டில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் பெட்டாலிங் ஜெயா லோட் 10 திடலில் நடைபெறுகிறது.
JK Builders and Engering SDN BHD நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ சாரா பெயரில் நடத்தப்படும் டத்தோஸ்ரீ சாரா கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் குழுக்களுக்கு 10,250 வெள்ளி ரொக்கப் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது என்று மை எஃப் ஏ யாங் ஸ்டார் கிளப் தலைவர் மணி தெரிவித்தார்.

ஓவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் இந்த போட்டியில் 32 குழுக்கள் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
குழுக் கட்டணம் 450 வெள்ளி என்று தெரிவித்த மணி, இந்த போட்டியில் வெற்றி பெற்று டத்தோஸ்ரீ சாரா கிண்ணத்தை வெல்லும் குழுவுக்கு 5,555 வெள்ளி காத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 2,555 வெள்ளியும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 1,555 வெள்ளியும் 4 ஆவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 755 வெள்ளியும் வழங்கப்படும் என்று மணி தெரிவித்தார்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் குழுக்கள் 010- 2255726, 010 375 0071 , குமார் 014- 620 0951, சத்தியா 016-3371684, பயிற்றுநர் சுப்பராவ் 011-37503414, மாரி 018-3222091 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

