ஜெராம் தமிழ்ப்பள்ளி குறித்து காவல்துறையில் புகார் செய்தது உரிமை கட்சி!

குவாந்தான், ஜூலை 8-
கடந்த ஜூன் 29 , 2024 ,கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி ஒருவர் பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் கிடைத்து, கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது என்று ஒரு செய்தியை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அந்த செய்தி மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

6/7/2024 அன்று பகாங் மாநில உரிமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் திரு. கணேசன் அது உண்மையா என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்
காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.

இன்றுவரை நில குத்தகை ஒப்புதல் பற்றியோ அல்லது கட்டுமானம் தொடங்கப்பட்டதை பற்றியோ இதுவரை எந்த அதிகாரபூர்வ செய்தியையும் வரவில்லை என்று அவர் கூறினார்.

அண்மையில் அந்த பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை சென்று பார்த்தபோது அங்கே எந்த ஒரு கட்டுமான பணியும் நடக்க வில்லை.

அங்கே வெறும் நிலம் மட்டுமே இருக்கிறது .

அதனால், அந்த அதிகாரி வெளியிட்ட அறிக்கை உண்மையா, பொய்யா என்பது குறித்து கல்வி அமைச்சரிடம் இருந்து உண்மையான விளக்கத்தை பெறும் நோக்கில் காவல்துறையில் புகார் அறிந்திருக்கிறோம் என்று பகாங் மாநில உரிமை கட்சியின்
ஒருங்கிணைப்பாளர்
கணேசன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles