பேரா மாநில ம இ கா தலைவர் யார்? மோகன் – ஜெயகோபி யாருக்கு வாய்ப்பு?

ஈப்போ,ஜூலை8-
: ம இ காவின் தொகுதி முதல் தேசிய நிலையிலான கட்சி தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில் பேரா மாநிலத்தின் அடுத்தத் தலைவர் யார் என்னும் கேள்வி தற்போது பேரா மாநில ம இ காவினர் மத்தியில் எழுந்துள்ளது.

முன்னதாக பேரா மாநில ம இ காவின் ஆட்சிக்குழுவில் இடம் பெற 21 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மாநிலத்தின் முக்கியத் தலைவரும் தேசிய நிலையிலான ஒருவரும் கூட்டாகச் சேர்ந்து போட்டியில் களமிறங்கியவர்களை சந்தித்து போட்டியிலிருந்து விலகிவிடுமாறு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பேரா மாநிலத்தில் 11 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொண்ட நிலையில் 10 பேர் போட்டியின்றி பேரா மாநில ம இ கா ஆட்சிக்குழுவில் இடம் பிடித்தனர்.

இருப்பினும்,இந்த 10 பேரில் யார் பேரா மாநிலத்தை வழிநடத்தப் போகும் அடுத்த மாநில ம இ கா தலைவர் என்பது இன்னும் இங்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

இருந்த போதிலும் பேரா மாநிலத்தின் அடுத்த ம இ கா தலைவர் ஈப்போ பாராட் தொகுதி தலைவர் எஸ்.ஜெயகோபியா?அல்லது பாரீட் தொகுதி தலைவர் எஸ்.மோகனா என்னும் கேள்வி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முனுமுனுக்கப்பட்டு வருவதை வெளிப்படையாக காணவே முடிகிறது.

ஜெயகோபி பேரா மாநில ம இ காவின் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் இதற்கு முன்னர் பதவி வகித்துவந்துள்ளார்

.அதேவேளையில்,வழக்கறிஞரான மோகன் மாநிலத்தில் துணைத்தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் மிகச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரா மாநில ம இ கா தொகுதி தலைவர்கள் மட்டுமின்றி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடையிலும் தனக்கான செல்வாக்கையும் ஆதரவையும் பெற்றிருக்கும் அவ்விருவரில் ஒருவர் பேரா மாநிலத் தலைவர் நியமனத்திற்கு சரியானத் தேர்வாக இருக்கும் என மாநில ம இ காவினர் கருத்துரைத்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டு காலமாய் பார்த்தோமானால் பேரா மாநில ம இ கா பெரும் சோர்வடைந்த நிலையில் தான் இருந்து வருகிறது.

அதற்கு புதிய தலைமைத்துவம் அவசியமாகிறது. அதுவும் பேரா மாநிலவாசியாகவும் இங்குள்ள தொகுதி தலைவர்களோடு அணுக்கமான நட்புறவிலும் இருந்து வரும் ஒருவரை மாநிலத்தலைவராக நியமனம் செய்வதே மாநில ம இ காவை மீண்டும் புத்துணர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என ம இ காவினர் கருதுகிறார்கள்.

அவ்வகையில்,பாரீட் தொகுதி தலைவர் முதன்மை தேர்வாக இருப்பதாகவும் கட்சியின் தேசியத் தலைவர் எஸ்,மோகனை மாநிலத் தலைவராகவும் துணைத்தலைவராக எஸ்.ஜெயகோபியையும் நியமிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.இவர்களின் தலைமைத்துவத்தில் பேரா மாநில ம இ கா சிறந்த இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

மேலும்,கட்சி உறுப்பினர்கள் தொடங்கி இந்தியச் சமுதாயத்தின் மத்தியிலும் பேரா மாநில ம இ கா தனித்துவச் செல்வாக்கை பெறுவதற்கு இது வழிகோலும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles