
கோலாலம்பூர்: ஜூலை 8-
இணைய பகடிவதை விவகாரத்தை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை விவாதத்திற்கு கொண்டு வரப்படும் என்று
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
நாட்டில் இணைய பகடிவதை தொடர்பான குற்றச்சாட்டுகளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த இணைய பகடிவதை தொடர்பான விவகாரம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
புதிய சட்டம் அமலாக்க அம்சங்களை உள்ளடக்கிய சிறந்த தீர்வைக் கண்டறிவதற்கான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று அமைச்சர் பாமி பட்சில் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பாமி பட்சில் இஸாவின் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

