கெடா சுங்கை பட்டாணியில்வள்ளலார் சுவாமியின் தியான மண்டபத்தை டத்தோஸ்ரீ தனேந்திரன் திறந்த வைத்தார்

சுங்கை பட்டாணி, ஜூலை 9-
கெடா சுங்கை பட்டாணியில் நேற்று
வள்ளலார் சுவாமிகளின் தியான மண்டபத்தை மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

வள்ளலார் சுவாமிகளின் தூயக் கொள்கைகளை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சுவாமிகளின் அருட்பிரக்ஷ வள்ளலார் (சிதம்பரம் ராமலிங்கம்) தியான மண்டபத்தின் திறப்பு விழா, அருள்மிகு சிவலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆலய வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மண்டப திறப்பு விழாவில் கட்சியின் உதவித் தலைவர்களான குகனேஸ்வரன், மணிவண்ணன், பொருளாளர் டத்தோ ஓஜி சண்முகம், ஆலயத் தலைவர் டாக்டர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles