தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம் !அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், ஜூலை 9-
தேர்தல் பிரசார காலத்தில் அமைச்சர்கள் அல்லது அரசு துறைகள் அரசாங்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு துறைகள் அரசாங்கம் இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என்பது அமைச்சரவையின் முடிவாகும்.

காரணம், ஊழலை ஒழிக்கும் நமது கோட்பாட்டின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.

ஊழல் கலாசாரம் தொடரக்கூடாது என நாம் விரும்புகிறோம். இருப்பினும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்பத் தேவையில்லை என நான் நினைக்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles