

ரவாங், ஜூலை 11-
கடந்த வாரம் சனிக்கிழமை, கோலாலம்பூரில் இளையோர் அனைத்துலக மையத்தில் (International Youth Centre) அனைத்துலக இளம் ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், உலு சிலாங்கூர், சுங்கை சோ தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 11 குழுவை சேர்ந்த இளம் ஆய்வாளர்களின் அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இம்முறை சுங்கை சோ தமிழ்ப் பள்ளி அதிகமாக குழுக்களின் படைப்புகளை அனுப்பியதோடு, 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை வென்றது.
பள்ளியின் தலைமையாசிரியர், திருமதி ஜெயந்தி லிங்கப்பன் கூறுகையில் தமது பள்ளி ஆசிரியர்களின் திறமையான வழிகாட்டுதலும், மாணவர்களின் மேலோங்கிய ஆர்வமும் உழைப்பும் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புமே வெற்றியின் தூண்டுகோள் என்பதினை உறுதிப்படுத்தி உள்ளது என்றார்.
இந்நிகழ்விற்கான போக்குவரத்து மற்றும் மாணவர்களின் உணவுக்கான அனைத்து செலவுகளையும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், கொடை நெஞ்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் சு. குமரேசன் அவர்கள் தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தமைக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

