
கோலாலம்பூர் ஜூலை 11-ஷாம்பவி வேன்சர்ஸ் – டான்ஸ்ரீ சோமா கலை கலாசார அறவாரியம் இணைந்து வழங்கும் வில்லிசை இராமாயணம் மேடை நாடகம்! வரும் அக்டோபர் 19,20 ஆம் தேதிகளில் பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட்டதன் விளைவாக உலகளவில் இராமர் பக்தியின் மறுமலர்ச்சியை காண முடிந்தது.
இராமாயணத்தின் கலாச்சார ஆன்மீகம், கல்வி இரண்டையும் மக்களுக்கு வழங்கும் வகையில் இந்த நாடகம் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த மேடை நாடகத்தின் பின்னணியில் இயக்குநர் ரெ.ச.சண்முகம் , எழுத்தாளர் இயக்குநர் ஆர்டிஎம் பார்வதி, பல்துறை நடிகரும் எழுத்தாளருமான ஆர்டிஎம் மலர்விழி சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
வில்லிசை இராமாயணத்தின் எழுத்தாக்கம் பி.சோதிராஜன், இசை இயக்கம் இசை அமைப்பாளர் துருவன் படைத்துள்ளனர்.
வரும் அக்டோபர் 19 20 ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த மேடை நாடகம் வெற்றி பெற காண பொதுமக்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

