42 கிராமங்கள் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மடாணி கிராமங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜூலை 12: நாடு முழுவதும் மொத்தம் 42 கிராமங்கள் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மடாணி கிராமங்களாகத் (கம்போங் அங்காட் மடாணி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் சிறு திட்டங்களைச் செயல்படுத்துவதை எளிதாக்குவதற்கும் விரைவு படுத்துவதற்கும் ஒரு செயல்முறையாகும் என்று நிதி அமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
“கிராமங்களுக்கான தேர்வு அளவுகோல் 50 சதவீதத்திற்கும் குறைவான அல்லது முழுமையற்ற அடிப்படை வசதிகளைக் கொண்ட கிராமங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படுபவை ஆகும்.

“ஒவ்வொரு கிராமமும் அதிகபட்சமாக 2.5 மில்லியன் ரிங்கிட் வரை ஒதுக்கீடு பெறுகிறது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி வரை, 35 கிராமங்களை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கு நிதி அமைச்சகம் 86.3 மில்லியன் ரிங்கிட் வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles