அஜீத் ரசிகர் மன்றத்தின் புட்சால் கிண்ணப் போட்டியில் ரெபெல்ஸ் கிளப் சாம்பியன்

மலேசிய அஜீத் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில் செமினியில் நடைபெற்ற புட்சால் லீக் கிண்ணப் போட்டியில் 32 குழுக்கள் கலந்து கொண்டன.

சிலாங்கூர் மந்திரி புசார் நிறுவனத்தின் சமூகக் கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமட் அஸ்ரி ஸைனால் நோர், கெஅடிலான் உலு லாங்காட் தொகுதித் தலைவரும் சிலாங்கூர் மாநில வேவ் ஆலோசகருமான ராஜன் முனுசாமி, உலு லாங்காட் நாடாளுமன்றத்தில் போட்டியிடும் ஹாராப்பானைச் சேர்ந்த முகமட் சானி ஹம்சான், காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜுனன், செமினி இந்திய சமுகத் தலைவர் நடேசன், விஷ்ணுதேவ் ஆகியோர் போட்டியை காண சிறப்பு வருகை புரிந்தனர்.

இப்போட்டியில் ரெபெர்ஸ் கிளப் வெற்றியாளர் கிண்ண தையும் 2,500 ரொக்கத்தைத் தட்டிச் சென்ற வேளையில், 2ஆவது இடத்தை பிடித்த ஜெட்.எம்.எப்.டி. கிளப்புக்கு 1,500 ரொக்கம் வழங்கப்பட்டது.

3ஆவதாக வென்ற சாஹாபாட் எப்.டி. குழுவுக்கு 700 வெள்ளி வழங்கப்பட்டது.

மலேசிய அஜீத் ரசிசர் மன்றத் தலைவரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான தேவேந்திரன் தலைமையில் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles