நான் சொத்துக்களை
பகிரங்கமாக அறிவித்ததை போல்
கைரியும் அறிவிக்க வலியுறுத்த வேண்டும்!
டத்தோ ரமணன் சவால்

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் நான் எனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவித்துள்ளேன்.

என்னை எதிர்த்து போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் கைரி ஜமாலுடின் தனது சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கெஅடிலான் வேட்பாளர் டத்தோ ரமணன் சவால் விடுத்துள்ளார்.

எனது சொத்துக்களை பற்றி கேள்விகள் எழுப்பும் தரப்பினர் என்னை எதிர்த்து போட்டியிடும் கைரி ஜமாலுடின் தைரியமாக சொத்துக்களை அறிவிக்கும் வலியுறுத்த வேண்டும் என்று டத்தோ ரமணன் சவால் விடுத்துள்ளார்.

கார்கள், வீடுகள், நகைகள், மோட்டார் சைக்கிள்கள், பங்குகள் உட்பட ஆறு கோடியே 35 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களை டத்தோ ரமணன் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles