
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை ஆதரித்து மலேசியா தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்தியா சுதாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளனர்.
இம்முறை சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளார்.
அந்த வகையில் இம்முறை அவர் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார் அவர்.
இதனிடையே கெஅடிலான் கட்சி சார்பில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் எஸ் கேசவன் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

