
பினாங்கு மாநிலத்திலுள்ள கப்பளா பத்தாஸ் மற்றும் தாசேக் குளுகோர் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்ற போராடி வருகிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் 112 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி அரசாங்கத்தை அமைப்போம்.
பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நம்பிக்கைக் கூட்டணியின் கோட்டைகளாக உள்ளள.
பேரா மாநிலத்திலும் பக்கத்தான் ஹரப்பான் கூடுதல் இடங்களை வெல்லும்.
பினாங்கு மாநிலத்தில் புக்கிட் மெர்தாஜாம், பெர்மாத்தாங் பாவ், பத்து காவான் தொகுதிகளை மீண்டும் தற்காத்து கொள்வோம்.
அம்னோவின் கோட்டைகளாக விளங்கும் கப்பளா பத்தாஸ் மற்றும் தாசேக் குளுக்கோர் தொகுதிகளை முதல் முறையாக பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றி சாதனைப் படைப்போம் என்று அவர் சொன்னார்

