
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் நரித்தனம் இனியும் பக்கத்தான் ஹரப்பான் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பலிக்காது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
மூன்றாவது முறையாக பிரதமராக வர மகாதீர் முகமது துடித்து கொண்டிருக்கிறார்.
இவரை மலேசியர்கள் நம்பமாட்டார்கள்.
திராட்டை பழத்தை பறிக்க நரி மரத்தில் ஏறியது. பழம் உயரத்தில் இருந்ததால் பழத்தை பறிக்க முடியவில்லை.
இறுதியில் இந்த திராட்சை பழம் புலிப்பதால் பழத்தை பறிக்கவில்லை என்று நரி சப்புக் கட்டியது.
அதேபோல்தான் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் துன் டாக்டர் மகாதீரை கூட்டணியில் இணைந்து கொள்ளவில்லை என்பதால் இப்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சாடுகிறார்.
ஆகவே இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். நாடு தழுவிய அளவில் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவாக மக்கள் அலை வீசுகிறது.
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டிப்பாக பதவி ஏற்பார்.
நாட்டை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற மக்கள் மிகவும் தெளிவாக புறப்பட்டு விட்டார்கள் என்று அவர் சொன்னார்.

