ரெம்பாவ் தொகுதியில் இருந்து
கைரியை துரத்தி விடவில்லை!
மறுக்கிறார் முகமட் ஹசான்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து கைரி ஜமாலுடினை கட்டாயமாக வெளியேற்றினேன் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அம்னோ துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இன்று மறுத்துள்ளார்.

நான் அவரை துரத்தி விட்டதாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிறிதளவும் உண்மையல்ல.

2018 ஆம் ஆண்டில் அம்னோ துணை தலைவராக வெற்றி பெற்ற பின்னர் ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அப்போதே கைரியிடம் தெரியப்படுத்தி விட்டோம்.

இது எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடு.

தம்பின் மற்றும் கோலாப்பிலாவில் கைரியை நிறுத்த முயன்றோம். ஆனால் அங்குள்ள மக்கள் கைரி போட்டியிடுவதை விரும்பவில்லை.

இறுதியில் மலாய்க்காரர்கள் அதிகமாக உள்ள சுங்கை பூலோவில் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles