
வாஷிங்டன் ஜூலை 23-
அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகலை அடுத்து தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென ஆதரவு கோரப்பட்டு வருகிறது
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் வெளிப்படையாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தனர்
இருப்பினும்
முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் தலைவர் சக் ஷுமர் ஆகியோர் கமலா ஹாரிஸ் குறித்த தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்களான இவர்களின் ஆதரவு என்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை வீழ்த்த முடியும்.

