
கோலாலம்பூர் ஜூலை 24-
சீனா பள்ளிகளுக்கு நன்கொடை திரட்டும் நிகழ்ச்சிகளை மதுபான நிறுவனங்கள் நடத்துவது புதிதல்ல.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இது நடைமுறையில் உள்ளது.
இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் நேரடியாக கலந்து கொண்டுள்ளேன்.
ஆனால் அது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
ஆனால் இப்போது மட்டும் இதை திடீரென பிரச்சனையாக்குவது ஏன் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கேள்வியை எழுப்பி உள்ளார்.
மதுபான நிறுவனங்கள் சீன பள்ளிகள் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வழங்குவது வழக்கமாகும்.
மதுபான நிறுவனங்கள் உள்ளிட்ட கிடைக்க பெறும் நன்கொடைகளை பெறுவதற்கு பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நேற்று முன்தினம் கல்வி அமைச்சு சுட்டி காட்டியது.

