மலேசிய திறன் சான்றிதழ் பட்டதாரிகள் அரசுப் பணிக்கு தகுதியானவர்களே- துணைப் பிரதமர் உத்தரவாதம்!

கோலாலம்பூர், ஜூலை 24 – திறன் மேம்பாட்டுத் துறையின் (ஜே.பி.கே.) சான்றிதழ் அல்லது டிப்ளோமா வைத்திருப்போர் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

திவேட் எனப்படும் தொழில் நுட்பம் மற்றும் தொழில் கல்வியின் டிப்ளோமா திட்டங்களை பொதுச் சேவைத் துறை (ஜே.பி.ஏ.) அங்கீகரிக்கவில்லை என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.
பொது மக்கள் மத்தியில் தவறானப் புரிதலை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய ஊகங்களைப் பரப்புவது நிறுத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன்.
திவேட் துறை குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 92.5 விழுக்காடாக இருந்த அத்துறை சார்ந்த பட்டதாரிகளுக்கான சந்தை வாய்ப்பு கடந்தாண்டு 94.5 விழுக்காடாக உயர்வு கண்டது. தொழில் துறையில் இக்கல்விக்கு உரிய ஆதரவும் அங்கீகாரமும் உள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

மனிதவள அமைச்சின் கீழுள்ள திறன் மேம்பாட்டுத் துறையினால் வெளியிடப்பட்ட திவேட் டிப்ளோமா சான்றிதழ் பொதுச் சேவைத் துறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இதற்கு முன்னர் முன்வைக்கப் பட்டிருந்த நிலையில் துணைப் பிரதமர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles